Thursday, November 13, 2008

Legal Issues

New and interesting legal issues will be updated as and when required!!!

கா(சா )தல்...

இன்பத்தில் இழைந்து
இளமையில் இனிந்து
இறக்கையில் இணைந்து
இலக்கை இனம் கண்டு
இருந்து வந்தேன் - உன்னை
சந்திக்கும் முன் வரை!

அனுபவ பாடம்

இதழ் விரிப்பதால் வரும் மரண ஓலை மலர்களுக்கு மட்டுமல்ல... மனதிற்கும் தான்!

Sunday, September 7, 2008

சோகம் தழுவிய சுகம்!

பள்ளியைப் பிரிந்தேன்
பயணம் மேற்கொண்டேன் !
கல்லூரியைக் கடந்தேன்
கனவை உணர்தேன் !

நட்பை பெற்ற நான்
நம்பிக்கை அடைந்தேன்!
உறவை உணர்ந்த நான்
உரத்தை பெற்றேன்!

ஆனால் இப்போது…
பயணத்தைத் தொடர்ந்து
கனவையடையும் தருவாயில்....

தோழமை தொலைத்தேன் என்
தோள்கள் தளர்ந்தேன் !
நெருங்கிய உறவு என்னை
நொறிக்கி செல்ல ...
உயிர் பிரியும் வலி உணர்ந்தேன் !

என் குருதியும் குமுருகிறதே
இதைதான் இரத்த பாசம் என்பதோ !
என்றும் மரணத்தை மிஞ்சிய வலி
மற(று)க்க படுவதால்!
இது நான் அனுபவத்தில் கண்ட பாடம்...
இல்லை இல்லை சோகம் !!!